தனுஷ் படத்துக்கு திடீர் சிக்கல்

ஐதராபாத்: தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடித்துள்ள ‘சார்’ படமும், இதன் தமிழ்ப் பதிப்பான ‘வாத்தி’ படமும் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இப்படங்கள் வரும் டிசம்பர் 2ம் தேதி திரையிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில், தற்போது இப்படங்களின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தேதியில் சில தெலுங்கு படங்கள் திரைக்கு வருவதால், தனுஷ் படங்களை வரும் ஜனவரி 26ம் தேதி வெளியிடுவதாக சில சமூக வலைத் தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Related Stories: