கமலுடன் போட்டோ ஷூட் நடத்திய அக்‌ஷரா

சென்னை: கமல்ஹாசனுடன் அவரது மகள் அக்‌ஷரா ஹாசன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்‌ஷரா ஹாசன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசனும் அவருடைய மகள் அக்‌ஷரா ஹாசனும் கலந்துகொண்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஆடியோ விழா தொடங்குவதற்கு முன் கமல்ஹாசன் அக்‌ஷரா ஹாசன் இருவரும் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். தந்தை -மகள் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்‌ஷரா ஹாசன் பதிவு செய்தார். இது தற்போது வைரலாகி வருகின்றன.

Related Stories: