இந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ‘தேவரா’ என்ற படத்தின் மூலம் தென்னிந்திய படவுலகில் அறிமுகமானார். தற்போது ராம் சரணுடன் ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘தென்னிந்திய படவுலகினருடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் கலாச்சாரத்துடன் நான் மிகவும் இணைந்திருப்பதாக உணர்கிறேன். காரணம், இது எனக்கு மிகவும் பரிச்சயமானது. எனது அடையாளத்தின் முக்கிய பகுதி என்றும் சொல்லலாம். எனக்கு தமிழில் ஓரளவு பேச தெரியும் என்றாலும், தற்போது தெலுங்கில் பேசவும் தீவிர பயிற்சி பெற்று வருகிறேன்’ என்றார்.
