சென்னை: 50க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் ஜான் பிரிட்டோ. அவர் கூறியது: அங்கீகாரங்களில் சிறந்தது தமிழ்நாடு அரசின் அங்கீகாரம்தான். அந்த வகையில் எனக்கு திரைப்பட விருதை கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிய படங்கள் தொடங்கி பெரிய படங்கள் வரைக்கும் ஒவ்வொரு டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒவ்வொரு படங்களில் பணியாற்றி இந்த நாள் வரைக்கும் சினிமா துறையில் உச்சத்தில் வர முயற்சிக்கிற எனக்கு இந்த விருது பெரும் உற்சாக டானிக். நான் ஏற்கனவே விருது வாங்குவேன் என்று ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாகவே கனவோடும் என்னுடைய முயற்சியினுடைய வெற்றியின் உழைப்போடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
டைரக்டர் பேரரசுடன் பணிபுரிந்த அனுபவங்கள், ஏ. வெங்கடேஷுடம் பணிபுரிந்த அனுபவங்கள் இன்னும் ஏராளமான டைரக்டர்களோடு பணிபுரிந்த அனுபவங்கள் மூலம் கலை இயக்கத்தில் எந்த வகையில் புதுமைகளை புகுத்த முடியுமோ அந்த அளவுக்கு புகுத்தியிருக்கிறேன். என் அப்பா என்னைப்பார்த்து சொல்லுவார் நல்ல பெயரும் புகழும் எடுப்பதே ஒரு மனிதனுக்கு லட்சியம் நீயும் அதுபோல வளர்வாய் என்று. எனது அப்பா அன்று சொன்னது இன்று நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன்.
