நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலாபால் வரிசையில் சோலோ ஹீரேராயின் ஆகியுள்ளார் சுனைனா. படத்தின் டைட்டில் ரெஜினா. இந்த படத்தை சதீஷ் நாயர் இசை அமைத்து தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் கதையை எனக்கு கூறினார். அப்போது தான் இந்த புதிய முயற்சியில் இறங்கலாம் என்று தோன்றியது. எனக்கு என்னுடைய இசைத்திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டும், அதைவிட ஒரு நல்ல கதையும் வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் வந்ததால் இப்படம் உருவாகியது.
இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்று பார்த்தபோது, அப்பாவியான முகமும் இருக்க வேண்டும், அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடிய விதமாகவும் இருக்க வேண்டும்.