மதுபாலா லுக்கை வெளியிட்ட மஞ்சு வாரியர்

‘என்டே நாராயணனுக்கு’ என்ற குறும்படத்துக்கு பிறகு வர்ஷா வாசுதேவ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ என்ற படத்தில் மதுபாலா, இந்திரன்ஸ் நடித்துள்ளனர். இதன் செகண்ட் லுக் போஸ்டரை மஞ்சு வாரியர் வெளியிட்டார். முன்னதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார். பாபுஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ளார்.

சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடித்துள்ள மதுபாலாவுக்கு அழுத்தமான கேரக்டர் கிடைத்துள்ளது. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். வாரணாசியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, சாபு மோகன் அரங்கம் அமைத்துள்ளார். ரெக்சன் ஜோசப் எடிட்டிங் செய்ய, பிருந்தா நடனப் பயிற்சி அளித்துள்ளார். அன்வர் அலி, உமாதேவி, வருண் குரோவர், கஜனன் மித்கே பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related Stories: