விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா: அமீரகம் வழங்கியது

இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்களுக்கு துபாய் அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. பல முன்னணி நடிகர் நடிகைகள் இதனை பெற்றுள்ளனர். இந்த விசா  மூலம் ஐக்கிய அமீரகத்தின் கவுரவ குடிமக்களாக 10 ஆண்டுகள் வாழலாம்.  தமிழில் பார்த்திபன்  கோல்டன் விசா பெற்றுள்ளார். தற்போது விஜய்சேதுபதிக்கு  கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக விஜய் சேதுபதி 2 வருடங்கள் துபாயில் வேலை பார்த்தார். வேலை பார்த்த நாட்டின் கோல்டன் விசா விருது பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related Stories: