அல்லு அர்ஜுனை பாராட்டிய கார்த்தி

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் புஷ்பா படத்தை பாராட்டியிருந்தார். இந்நிலையில் கார்த்தி, புஷ்பா படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளத்தில் பாராட்டு மழை பொழிந்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘அல்லு அர்ஜூன்... புஷ்பாவாக உங்களுடைய நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். ரசிகர்களை சிறைபடுத்தும் நடிப்பை தந்துள்ளீர்கள்’ என பாராட்டியுள்ளார். மேலும் இயக்குநர் சுகுமாரையும் தனது டிவிட்டில் பாராட்டியுள்ளார் கார்த்தி. ‘சுகுமார் சார், நீங்கள் உருவாக்கும் கேரக்டர்கள் மற்றும் தருணங்களும் அதை எவ்வாறு கேப்ட்சர் செய்கிறீர்கள் என்பது தரமாக உள்ளது. மேலும் சிறப்பான பணி’ என மொத்த படக்குழுவுக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார் கார்த்தி.

நடிகர் கார்த்தியின் இந்த பதிவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘நன்றி கார்த்தி காரு, என்னுடைய நடிப்பு, அனைவரின் பணி மற்றும் புஷ்பா உலகம் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இதயம் கனிந்த பாராட்டுக்களுக்கு நன்றி’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: