பாகிஸ்தான் நாட்டில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

இஸ்லமபாத்: பாகிஸ்தான் நாட்டில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியதால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பிரபல வீடியோ செயலியான டிக் டாக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு நாடுகளில் டிக் டாக் இன்னமும் மிகப்பிரபலமான செயலிகளில் ஒன்றாக உள்ளது.  பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலி லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானில் உள்ள  பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டிக் டாக் செயலியில்  ஆபாசமான பதிவுகள்  உள்ளதாகவும் எல்ஜிபிடி (LGBTQ) சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் டிக் டாக் பதிவுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் செயலிக்கு எதிராக சிந்து  நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவு வந்ததால், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிக் டாக்கை தடை செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. அதேவேளையில், ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து,  பாகிஸ்தானில் மீண்டும் டிக் டாக் செயலிக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது….

The post பாகிஸ்தான் நாட்டில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ! appeared first on Dinakaran.

Related Stories: