ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு

ஜப்பானின் அடுத்த பிரதமராக எல்டிபி கட்சியின் ஷிகெரு இஷிபா (67) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் 368 உறுப்பினர்களும் கட்சியின் அடித்தள உறுப்பினர்களும் ஷிகெரு இஷிபாவை தேர்வு செய்தனர்.

மோசடி குற்றச்சாட்டால் ஃபியூமோ கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. உட்கட்சித் தேர்தலில் 9 பேர் போட்டியிட்ட நிலையில் அதில் 3பேர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகினர். ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷிகெரு இஷிபா பிரதமராக தேர்வாகியுள்ளார்.

ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட குறைந்த ஒப்புதல் மதிப்பீடுகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு லிபரல் டெமாக்ரடிக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களை, குறிப்பாக சீனாவின் எழுச்சி மற்றும் அமெரிக்கத் தலைமையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைகள் உள்ள இந்த நேரத்தில் ஜப்பானின் புதிய பிரதமருக்கு அதிக நெருக்கடி வந்தது. எனினும், இந்த பதவிக்கான போட்டியில் தற்போது ஒன்பது பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது. 9 பேர் போட்டியிட்ட நிலையில் அதில் 3 பேர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகினர். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா, 67 இன்று (27 செப். 2024) புதிய கட்சித் தலைவராக பதவியேற்று, ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்பார்.

The post ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: