அதிகாரத்தை எதிர்க்கும் விஷால்

விஷால் நடித்துள்ள படம், ‘வீரமே வாகை சூடும்’. து.பா.சரவணன் இயக்கியுள்ளார். ‘தேவி 2’ படத்தில் நடித்திருந்த டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீணா ரவி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் நடித்துள்ளனர். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தமிழில் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ‘சாமான்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் சாமான்யனின் கதையுடன், ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More