புதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன்

தமிழில் வெளியான ஆல்பம், வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர், வசந்தபாலன். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்னதி, ராதிகா நடிப்பில் ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், தனது நண்பர்களுடன் இணைந்து சிறுபட்ஜெட் படம் ஒன்றை குறுகியகால தயாரிப்பாக உருவாக்க திட்டமிட்ட வசந்தபாலன், அது பற்றி அறிவித்தது மட்டுமின்றி, அதில் நடிப்பவர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரமும் வெளியிட்டார். 

இதுவரை எந்தப் படத்துக்கும் அவர் இதுபோல் வெளிப்படையாக நடிகர், நடிகைகளை தேடியது இல்லை. முன்னணி நடிகர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லும் தேதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதனால் புதுமுகங்களை நடிக்க வைக்கிறார் வசந்த பாலன்.

Related Stories:

>