அடுத்த ஆண்டில் பூர்ணா திருமணம்

கேரளாவில் வசித்து வரும் பூர்ணா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய வீட்டில் மணமகன் பார்த்தனர். சில காரணங்களால் அவரது திருமணப் பேச்சு நின்றுவிட்டது. இதுகுறித்து பூர்ணா கூறுகையில், ‘சில காரணங்களால் எனக்கு இப்போது மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று, என் பெற்றோரிடம் சொல்லிஇருக்கிறேன். தமிழில் பிசாசு 2, தலைவி, விசித்திரன், புளூவேல், தெலுங்கில் சுந்தரி மற்றும் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடித்து வருகிறேன். தவிர, வெப்தொடர்களில் நடிக்கிறேன். சினிமாவில் பிசியாக இருப்பதால், அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய நினைத்துள்ளேன். என்னை நன்கு புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்’ என்று சொன்னார்.

Related Stories:

>