மானூர் வட்டார விவசாயிகள் கவலை விலை கிடைக்காததால் மாடுகளுக்கு தீவனமாகும் வெண்டை காய்கள்

நெல்லை : மானூர் வட்டாரத்தில் வெண்டைக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்தில் உள்ள வெண்டைகாய்கள், செடிகளை மாடுகளுக்கு உணவாக்குகின்றனர்.நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களில் நெல், வெண்டை, தக்காளி மற்றும் பூக்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தற்போது இப்பகுதியில் உள்ள பல நிலங்களில் வெண்டை, தக்காளி விளைச்சல் மிக அதிகமாக உள்ளது. இங்கு மட்டுமின்றி நெல்லை, ெதன்காசி மாவட்டங்களில் பல பகுதிகளில் தக்காளி, வெண்டை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் இவற்றிற்கு தகுந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடந்த சில வாரங்களாக இந்த நிலை நீடிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பறித்த வெண்டைக்காய் கிலோ ரூ.4க்கு கூட வாங்க ஆள் இல்லாததால் அவற்றை சாலையோரம் கொட்டினர். தற்போதும் இந்த நிலை தொடர்கிறது. வெண்டைக்காய் பறிகூலி கூட கிடைப்பதில்லை. இதனால் சில விவசாயிகள் தங்கள் வெண்டை தோட்டத்தில் மாடுகளை மேயவிட்டு அவற்றிற்கு வெண்டை காய்கள், செடியை உணவாக்குகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மானூர் வட்டாரத்தில் வெண்டைக்காய், தக்காளி போன்றவை நடவு நட்ட 50வது நாளில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் பறிக்கிறோம். இவ்வாறு தொடர்ந்து பறிக்காவிட்டால் வெண்டைக்காய் முற்றிவிடும். தக்காளி பழுத்து அழுகிவிடும். இதனால் விளைந்த உடன் பறிக்கும் நிலை உள்ளது. ஆனால் மொத்தமாக அனைத்துப்பகுதிகளிலும் தினமும் அறுவடை நடைபெறுவதால் இதற்கு போதிய விலை கிடைக்கவில்லை. வழக்கமாக கொள்முதல் விலை ரூ.20ல் இருந்து ரூ.40 வரை உயரும். ஆனால் திருமணம், சுபநிகழ்சிகள் போன்ற சீசன் இருந்தும் கொள்முதல் விலை 4 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இதனால் அவற்றை பறிப்பதற்கான கூலி கூட கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது’ என்றனர்….

The post மானூர் வட்டார விவசாயிகள் கவலை விலை கிடைக்காததால் மாடுகளுக்கு தீவனமாகும் வெண்டை காய்கள் appeared first on Dinakaran.

Related Stories: