கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் புறக்கணித்தார் அண்ணாமலை!

 

கோவை: கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் அண்ணாமலை புறக்கணித்தார். நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், வேலுமணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமரை வரவேற்றனர். கோவையிலேயே தங்கியிருந்த அண்ணாமலை பிரதமரை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்தார். கோவை சிங்காநல்லூர் (அ) கவுண்டம்பாளையத்தில் போட்டியிட அண்ணாமலை விரும்பிய நிலையில், தொகுதி ஒதுக்கப்படவில்லை.

தான் போட்டியிட சீட் ஒதுக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி வரவேற்பை புறக்கணித்தார் அண்ணாமலை. அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனியில் எல்.முருகனை’ முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் போராடிய நிலையில், மோடியை புறக்கணித்தார் அண்ணாமலை.

போட்டியிட சீட் ஒதுக்கப்படாததால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமரை வரவேற்கும் பட்டியலில் அண்ணாமலை பெயரும் இருந்தது; அவர்தான் வரவில்லை என வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். யாருக்கு எப்போது எந்த பதவி கொடுக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு தெரியும். கட்சியில் 5 ஆண்டு வேலை செய்தவருக்கு ஒரு ஆசை இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: