இ-டைரோத் எலக்ட்ரிக் பைக்

ஈகோ தேஜாஸ் என்ற இந்திய எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம்,  இ-டைரோத் என்ற பெயரில் முதலாவது அதிவேக எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.3 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இந்த மாத இறுதியில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 72 வோல்ட் 60 ஏஎச் ஒரு பேட்டரி நிலையானதாக பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 150 கி.மீ தூரம் வரை செல்லும். வாடிக்கையாளர்கள் விரும்பினால் உபரியாக மற்றொரு பேட்டரியும் இணைத்துக் கொள்ளலாம். இதற்கான இடம் பைக்கில் விடப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரியும் சேர்த்து ஒரு முறை சார்ஜில் 300 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த பைக்கில்  அதிக ஆர்பிஎம் கொண்ட 4 வாட்ஸ் மிட்-டிரைவ் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகம் வரை செல்லும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் டீலர்ஷிப்கள் உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post இ-டைரோத் எலக்ட்ரிக் பைக் appeared first on Dinakaran.

Related Stories: