பாய் பிரண்ட் இல்லாதது வருத்தம் என சொல்லியிருக்கிறார் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா வில்சன். அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயின் ஆனார். அந்த படம் ஹிட் ஆகவே, அவரும் பிரபலம் ஆனார். இப்போது விஷ்ணு விஷாலுடன் எப்ஐஆர், சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது கிறங்கடிக்கும் கண்களால் அதிகமான இளம் ரசிகர்களை அவர் பெற்றிருக்கிறார். அப்படி இருந்தும் இதுவரை தனக்கு பாய்பிரண்ட் யாரும் இல்லை என்கிறார்.