200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி

2 கோடி ருபாய் பட்ஜெட்டில் 30 நாட்களுக்குள் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள படத்துக்கு 200 பேர் தயாரிப்பாளர்கள். ஆம், திரைத்துறையை சேர்ந்த 200 பேர், ஆளுக்கு ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் ஆர்.பி.சவுத்திரி, திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோருடன் தயாரிப்பாளரும், நடிகருமான பிரமிட் நடராஜன் இணைந்து தயாரிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறரர்.

Advertising
Advertising

சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் பார்த்திபன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுபா வெங்கட் கதை எழுதியுள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு வியாபாரத்தின் மூலம் வரும் சதவீத அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் இப்படம், பிறகு 10 வாரங்கள் கழித்து அல்லது 100 நாட்கள் கழித்து ஓடி பிளாட்பார்மில் வெளியாகும். இந்த தகவல்களை திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Related Stories: