முதல்முறையாக ஒரு பாடலுக்கு மிருணாள் நடனம்

ஐதராபாத்: ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்த ராம் சரண், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தற்போது ‘பெத்தி’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கும் இதில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு உள்பட பலர் நடிக்கின்ற னர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் மார்ச் 27ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகா மந்தனாவை படக்குழு கேட்டபோது, ‘இனிமேல் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்’ என்று சொல்லி அவர் மறுத்துவிட்டார். தற்போது அப்பாடல் காட்சியில் மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒரு பாடலுக்கு ஆடுவது முதல்முறை என்பதால், அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது.

Related Stories: