×

வெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா

பாகுபலி படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். அப்படம் ரசிகர் களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து இயக்குனர் ராதா கிருஷ்ணா டைரக்‌ஷனில் காதல் படமொன்றில் நடித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில்  நடத்த திட்டமிடப்பட்டது.
 
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்குதலையடுத்து பல்வேறு வெளிநாட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரபாஸ், பூஜா படக்குழு கொரோனாவாவது, வைரஸாவது என்று சவால் விட்டு ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டு சென்று படப்பிடிப்பு நடத்தியது.

இதற்கிடையில் வெளிநாட்டு விமானங்கள் வருகையை வரும் 31ம் தேதி முதல் நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இதையறிந்த பிரபாஸ் படக்குழு அவசரமாக பாதியிலேயே படப்பிடிப்பை முடித்துக்கொண்டு தனி விமானம் பிடித்து இந்தியா திரும்பியது. விமானத்துக்குள்ளே பட குழுவினர் பிரபாஸ் உடன் குரூப் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags : Prabhas - Pooja ,flight ,
× RELATED துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் சென்னை வந்த பயணி நடுவானில் மரணம்