- சிவராஜ் குமார்
- நிரந்தர கணக்கு எண்
- இந்தியா
- உபேந்திரன்
- ராஜ் பி. ஷெட்டி
- பிரமோத் ஷெட்டி
- சுதா ரானி
- அர்ஜுன் ஜன்யா
- ரமேஷ் ரெட்டி
- சூரஜ் புரொடக்ஷன்ஸ்
- அர்ஜுன்
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி, பிரமோத் ஷெட்டி, சுதா ராணி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘45’. இசை அமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ளார். வரும் ஜனவரி 1ம் தேதி படம் ரிலீசாகிறது. சிவராஜ்குமார் கூறுகையில், ‘இது நான் நடித்துள்ள 129வது படமாகும். கன்னடத்தில் ‘ஆனந்த்’ என்ற எனது முதல் படத்தில் நடித்தபோது ஏற்பட்டிருந்த அதே பயமும், பக்தியும் இப்படத்தில் நடிக்கும்போதும் ஏற்பட்டது. அர்ஜூன் ஜன்யா கதை சொன்னபோது, அவர் எப்படி இதுபோல் ஒரு கதையை உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், கண்டிப்பாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரு மனிதனின் கதை அல்ல. அனைவரையும் இணைத்து வைக்கும் கதை கொண்ட ஒரு படம். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியபோது நான் கீமோதெரபியில் இருந்தேன். அந்த சிரமத்தை பொருட்படுத்தாமல் நடித்தேன். இயக்குனர் உருவாக்கியதை ஒரு கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும். அது டூயட் பாடலாக இருந்தாலும் சரி, கழிவறையை சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி. இப்படத்தில் நாங்கள் இயக்குனரின் கனவை முழுமையாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறேன்’ என்றார்.
