×

நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள்: காரில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார்

ஐதராபாத்: தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இவர் தமிழில் வெளிவந்த சிம்புவின் ‘ஈஸ்வரன்’, ரவி மோகன் நடித்த ‘பூமி’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முதல் முறையாக நடித்திருக்கிறார். இந்த நிலையில், ‘தி ராஜா சாப்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு ஐதராபாத்தில் உள்ள லூலூ மாலில் நடந்தது. இதில் நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அளவுகடந்து குவிந்துவிட்டனர். பாதுகாப்பு தடுப்புகளை மீறியதால் பதற்றமான சூழல் அங்கு நிலவியது.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வரும்போது நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் நிதி அகர்வால் அதிர்ச்சியடைந்து, கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். அப்போது அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று, அவரது காரில் ஏற்றினர். அவர் காரில் ஏறி அமர்ந்ததும், ரசிகர்களை கண்டபடி திட்டினார். பின்னர் முகத்தை மறைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், மனிதர்கள் மிருகங்களாக மாறினால் இப்படித்தான் நடக்கும். விழா ஏற்பாட்டாளர்கள்தான் இதற்கு முழு பொறுப்பு என ஆவேசமாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : Nidhi Agarwal ,Hyderabad ,Simbu ,Ravi Mohan ,Udhayanidhi Stalin ,Prabhas ,Lulu Mall ,Nidhi ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா