லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி ஆஸ்கர் விழாவை ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஆஸ்கர் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. 2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. இது ஆஸ்கர் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகாடெமி தெரிவித்துள்ளது.
