- சென்னை
- விக்னேஷ் கார்த்திக்
- விஷ்ணு விஷால்
- தம்பி ராமையா
- ஆதித்ய பாஸ்கர்
- எம். எஸ் பாஸ்கர்
- ப்ரியா பவானி ஷங்கர்
சென்னை: ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ என்பது 2024-ம் ஆண்டு வெளிவந்த ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது. நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிடைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜேபி டாக்கீஸ் சார்பில் கே.ஜே.பாலமணிமார்பன் தயாரிக்கிறார்.
