×

விடுமுறையை கொண்டாடிய ராஷ்மிகா

 

இந்தியில் ‘காக்டெயில் 2’, தெலுங்கில் ‘மைசா’ ஆகிய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, வரும் பிப்ரவரி மாதம் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். முன்னதாக வெளிநாட்டுக்கு நெருங்கிய தோழிகளுடன் சென்று ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். தற்போது இலங்கைக்கு சென்றுள்ள அவர், அங்கு எடுத்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ‘படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாட்கள் மட்டுமே எனக்கு விடுமுறை கிடைத்தது.

அதை எப்படி செலவழிப்பது என்று தீவிரமாக யோசித்தபோது, எனது தோழிகள் சிலருடன் நேரத்தை செலவழிப்பதற்காக இலங்கைக்கு சென்றேன். அங்குள்ள அழகான பகுதிகளை ஆர்வத்துடன் சுற்றினோம். இது ஒரு மகிழ்ச்சியான, மறக்க முடியாத சுற்றுப்பயணமாக அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Rashmika ,Rashmika Mandanna ,Vijay Deverakonda ,Sri Lanka ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..? ரகசியம்...