தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார் தமன்னா. கடைசியாக தமிழில் விஷால் ஜோடியாக ஆக்ஷன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் 2, இந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பங்கேற்கும் நேரம் குறைந்த நிலையில் பிற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். நகைக்கடை வைத்திருப்பதுடன் நகை டிசைன் வேலையும் இவருக்கு தெரியும்.