தொழிலதிபர் வீட்டில் வைர நகை திருட்டு: வேலைக்காரரிடம் விசாரணை

சென்னை: கோடம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் இருந்து வைர நகையை திருடு போனது தொடர்பாக, வீட்டு வேலைக்காரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் அசோகா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் அகஸ்டியன் பாபு (60). தொழிலதிபரான இவர், பிரபல கட்சி ஒன்றில் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது வீட்டில் வைத்திருந்த வைர கற்கள் பதித்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள செயின் மாயமானது. வீட்டில் உள்ள எந்த பொருட்களும் மாயமாகாத நிலையில், வைர நகை மட்டும் மாயமாகி உள்ளது. எங்களது வீட்டில் வேலை செய்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த அசோக் (45) என்பவர் மீது சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தி, நகையை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.அதன்பேரில், போலீசார் கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில் வசித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வேலைக்காரர் அசோக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தன்னுடன் பணியாற்றிய வருண் என்பவர் நகையை திருடிக்கொண்டு மாயமானது தெரியவந்தது. அதைதொடர்ந்து வைர நகையுடன் மாயமான வருணை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்….

The post தொழிலதிபர் வீட்டில் வைர நகை திருட்டு: வேலைக்காரரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: