சித்தையன்கோட்டையில் இரண்டு பஸ்ஸ்டாண்ட் இருந்தும் ‘வேஸ்ட்’

*பஸ்கள் வர மறுப்பதால் மக்கள் அவதி*புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?சின்னாளபட்டி : ஆத்தூர் ஒன்றியம், சித்தயன்கோட்டை பேரூராட்சியில் சேடபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், எம்.புதுப்பட்டி, லெட்சுமிபுரம் உள்பட பல கிராமங்கள் உள்ளன. சுமார் 18 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சித்தையன்கோட்டை ஊரின் நடுப்பகுதியில் வணிக வளாகத்துடன் பஸ் நிலையம் கட்டப்பட்டது. அதேபகுதியில் ஆடு அடிக்கும் தொட்டி (குளச்சாலை), கழிப்பறைகள், மேல்நிலை தண்ணீர் தொட்டி, மின்வாரிய அலுவலகமும் உள்ளது. இப்பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வருவது கிடையாது. இதனால் திறந்தவெளி கழிப்பிடமாக பஸ் நிலையம் மாறிவருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை கடைகள் செயல்படுவதால் பஸ் நிலையத்திற்குள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு எந்த பஸ்சும் உள்ளே நுழைந்து திரும்ப முடியாத அளவிற்கு ஆட்டோ, கார், டூவீலர் போன்ற வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தியுள்ளனர்.இதுபோல செம்பட்டி- வத்தலக்குண்டு சாலை சித்தையன்கோட்டை பிரிவில் 1987ம் ஆண்டு 8 கடைகளுடன் கூடிய வணிக வளாகத்துடன் பஸ்நிலையம் திறக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் மட்டும் நகர பஸ்கள் இப்பஸ் நிலையத்திற்கு வந்து சென்றது. அதன்பின் கடந்த 30 ஆண்டுகளாக எந்த பஸ்சும் வந்து செல்வதில்லை. இங்குள்ள 8 கடைகளில் பாதிக்கும் மேல் சேதமடைந்து விட்டன.எனவே பேரூராட்சி நிர்வாகம் சித்தயன்கோட்டை புதிய பஸ் நிலையத்தை புதுப்பித்து பஸ்கள் வந்து செல்ல வசதி செய்து கொடுத்தால் பொதுமக்கள் பயனடைவர். மேலும் சித்தையன்கோட்டை பிரிவில் உள்ள பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வணிக வளாகம் கட்டி கொடுத்தால் பேரூராட்சிக்கு வருவாயும் ஏற்படும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சித்தையன்கோட்டையில் இரண்டு பஸ்ஸ்டாண்ட் இருந்தும் ‘வேஸ்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: