திண்டுக்கல் துணை தாசில்தார் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தலையாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளமுருகன். இவரது பாட்டி திருமலை அம்மாள் 1986ல் இறந்து விட்டார். அதற்காக இறப்பு சான்றிதழ் கேட்டு இளமுருகன் கடந்த 2021ல் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்தார். சான்றிதழை அளிக்க திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக துணை தாசில்தார் ஜெயப்பிரகாஷ் (48) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசி ரூ.3 ஆயிரம் தர சம்மதித்த இளமுருகன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி இளமுருகன், ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ஜெயபிரகாஷிடம் வழங்கியபோது மறைந்திருந்த போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்தனர்….

The post திண்டுக்கல் துணை தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Related Stories: