ஹாலிவுட் ஸ்டார்களுக்கு பாலிவுட் ஸ்டார்களை தெரிந்ததுபோல் கோலிவுட் ஸ்டார்களை பற்றியும் தெரியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. நிச்சயம் தெரிந்திருக்கிறது என்பதை அவ்வப்போது அங்குள்ள ஸ்டார்கள் நிரூபித்து வருகின்றனர். கோலிவுட் பற்றியும், சென்னை தண்ணீர் பஞ்சம் பற்றியும் டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டீகேப்ரியோ அடிக்கடி டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்தார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் பாடி வெளியான, ‘ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல் ஹாலிவுட்டை எட்டியிருக்கிறது.