கண்ணடிச்சி கவிழ்த்தும் காரியம் கைகூடலையே.. முட்டி மோதும் பிரியா வாரியர்

ஒரு அடார் லவ் படத்தில் காதலனை பார்த்து கண்ணடித்தும், நமட்டு சிரிப்பு சிரித்தும், விரல் துப்பாக்கியால் சுட்டும் ஒரே நாளில் பிரபலம் ஆனார் நடிகை பிரியா வாரியர். ஆனால் அது நீடிக்கவில்லை. படம் வெளியாகி வெற்றி பெறாத நிலையில் பிரியா வாரியருக்கு வாய்ப்பு மந்தமாகவே இருந்தது. இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற திகில் படத்திலும் மற்றும் ஒரு அடார் லவ் படத்தில் நடித்த ஹீரோ ரோஷன் ஜோடியாக லவ்வர்ஸ் டே என்ற படத்திலுமாக மொத்தமே 2 படங்களில்தான் நடித்துள்ளார்.

பிரபலம் ஆன புதிதில் பிரியாவுக்கு பட வாய்ப்புகள் நிறையவே வந்தன. ஆனால் அதிக சம்பளம் கேட்டதால் அந்த படங்கள் நழுவிச் சென்றன. தற்போது அவரை தேடி வருவதற்கு யாரும் இல்லாத நிலை ஆகிவிட்டது.

இதையடுத்து இணைய தளம் மூலம் படங்களையும், மெசேஜும் பகிர்ந்து வாய்ப்புக்கு வலைவீசிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது ஹீரோ ரோஷன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இது காதல் ஜோடிக்கான படங்கள் இல்லை. ஒரு இதழுக்காக எடுக்கப்பட்ட படங்களாம். இது எந்தளவுக்கு இருவருக்கும் பட வாய்ப்பை பெற்றுத்தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories: