விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் அவர்களது இளவயது பாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் நடித்தனர். பள்ளி பருவ காதலர்களாக இருவரும் நடித்திருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. விஜய்சேதுபதி வேடத்தில் சர்வானந்த், திரிஷா வேடத்தில் சமந்தா நடித்துள்ளனர். தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இயக்கி உள்ளார். சமந்தாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் தமிழில் நடித்த கவுரி கிஷனே நடித்திருக்கிறார்.