தமிழில் முன்பு போல் சுனைனா நிறைய படங்களில் நடிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாரா என்று நிறைய கேள்விகள் எழுந்த நிலையில், அவர் கூறியுள்ள பதில் இது. ‘சமீபத்தில் ரிலீசான சில்லுக் கருப்பட்டி படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் நிலா நிலா ஓடி வா, ஃபிங்கர்டிப் ஆகிய வெப்தொடர்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.