கமல் கருத்துக்கு கவுதமி எதிர்ப்பு

சமீபத்தில் மத்தியில் ஆளும் பாஜ அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பாஜகவில் அங்கம் வகிக்கும் நடிகை கவுதமி, கமலின் கருத்துக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில்,’குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு பிரச்னையோ அல்லது பாதிப்போ ஏற்படாது. உண்மையை புரிந்து கொள்ளாமல் சிலர் வேண்டுமென்றே தவறான விவகாரங்களில் ஈடுபடுகின்றனர்’ என்றார்.

Related Stories: