நடிப்புக்காக ஹோம் ஒர்க் செய்வதில்லை.. ஸ்ரீபிரியங்கா

கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. சுரேஷ் காமாட்சி தயாரிப்பு இயக்கத்தில் வெளியாகும் மிக மிக  அவசரம் படத்தில் பெண் போலீஸாக நடித்திருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. அரிஷ்குமார், முத்துராமன், ஈ.ராமதாஸ், சீமான் போன்றவர்களும் நடித்திருக்கின்றனர். இதில் நடித்துபற்றி ஸ்ரீபிரியங்கா கூறியதாவது:

Advertising
Advertising

பெண் போலீஸார் சில சமயங்களில் உயர் அதிகாரிகளால்படும் அவஸ்த்தையையும், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினையையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரம் என்பதாலும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். சினிமா வில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்துபிறகுதான் எந்த நடிகைக்கும் இதுபோன்ற கதாபாத்திரம் கிடைக்கும் ஆனால் எனக்கு சீக்கிரமே கிடைத்திருக்கிறது.

போலீஸாக நடிக்க ஹோம் ஒர்க் எதுவும் பண்ணவில்லை. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே ஹோம் ஒர்க் எல்லாம் நான் பண்ணவே மாட்டேன். இயக்குனர் சுரேஷ் காமாட்சி, மிகமிக அவசரம் படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் முழுவதுமாக படித்து சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்வேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன். இவ்வாறு ஸ்ரீபிரியங்கா கூறினார்.

Related Stories: