பொங்கலுக்கு தயாராகும் ரஜினியின் தர்பார்

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு விட்டு விட்டு தொடர்ந்தாலும் ஸ்டெடியாக நடந்து வருகிறது. போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கிறார். மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்ட படக்குழு தற்போது ஜெய்ப்பூர் சென்றிருக்கிறது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினியும், நயன்தாராவும் ஒரே விமானத்தில் ஜெய்ப்பூர் பறந்தனர்.  ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நவாப் ஷா நடிக்கிறார். மற்றொரு வில்லனாக சுனில் ஷெட்டி நடிக்கிறார்.

தவிர பிரதிக் பாபர், திருநங்கை ஜீவா, யோகிபாபு, ஆனந்தராஜ், ஹரிஸ் உத்தமன், போஸ் வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை அடுத்த ஆண்டு அதாவது 2020ம் ஆண்டு அட்வான்ஸ் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி வெளியிட பட தரப்பு திட்டமிட, அதற்கு ஏற்ப வேகமாக காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

Related Stories: