வெப்சீரிஸில் சமந்தா

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் திருமணத்துக்கு பிறகு நடிக்க துவங்கிவிட்டார் சமந்தா. தெலுங்கில் சமீபத்தில் வெளியான ஓ பேபி படமும் அவரை சுற்றி நடக்கும் கதை கொண்ட படம்தான். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தன் கேரக்டரை முன்னிலைப்படுத்தும் பட கதைகளை சமந்தா கேட்டு வருகிறார்.

இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவும் அவரிடம் பேச்சு நடக்கிறது. இந்த வெப்சீரிஸும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து உருவாகும் தொடராகும். பாலிவுட், கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களே வெப்சீரிஸில் நடிக்க துவங்கிவிட்டனர். அதனால் சமந்தாவும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: