விலங்குகளை வைத்து படமாக்குவதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் இருப்பதால் அதுபோன்ற படங்கள் குறைந்துவிட்டது. எல்லாமே கிராபிக்ஸ் விலங்குகளாகவே படங்களில் காட்டப்படுகிறது. ஆனால் ஜீவா நடிக்கும் புதிய படத்தில் கொரில்லா குரங்கு நடிக்கிறது. பட டைட்டிலும் ‘கொர்ரிலா’ தான். இதற்காக ஒரிஜினல் கொரில்லாவை தேடி தாய்லாந்து சென்ற படக்குழு ஹாலிவுட் படத்தில் நடித்த கொரில்லா ஒன்றை தேர்வு செய்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளது. டான் சாண்டி இயக்க, விஜய் ராகவேந்திரா தயாரிக்க, சாம் சிஎஸ் இசை அமைத்திருக்கிறார்.