முதல் முறையாக இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், அந்த படத்தால் நடிப்பு திறமைக்காக பேசப்பட்டார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் புதுமுக டைரக்டர் இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். தெலுங்கில் நரேந்திரா மற்றும் நாகேஷ் குக்குனூர் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் முதல்முறையாக இந்தி படத்தில் அவர் அறிமுகமாகிறார்.