கார்த்திக் நரேன் படத்தில் நிவேதா பெத்துராஜ்

துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு நரகாசூரன் படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்த படம் ரிலீசாகாமல் தடைபட்டுள்ளது. இந்நிலையில் பார்த்திபன் நடிப்பில் நாடக மேடை என்ற படத்தை இயக்குவதாக கார்த்திக் நரேன் அறிவித்தார். அந்த படம் இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகியுள்ளார் கார்த்திக். ஆக்‌ஷன் திரில்லராக இந்த படம் உருவாகிறது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அடுத்த மாதம் ஷூட்டிங் துவங்கும் என தெரிகிறது.

Related Stories: