ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை அலியா பட். இதில் நடிப்பது குறித்து அவர் கூறியது: ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதில் நான் நடிக்க காரணமே அவரது படம் என்பதால்தான். பாகுபலி படத்தின் பெரிய வெற்றிக்காக இதை சொல்லவில்லை. மகதீரா முதல் நான் ஈ வரை அவரது மற்ற படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆடியன்சுக்கு எது பிடிக்கும் எதை ரசிப்பார்கள் என்பதை அறிந்தவர் ராஜமவுலி.