தமிழகத்தில் ஒன்றிய அமைச்சர்களின் ஆய்வு ஆரோக்கியமானதல்ல: கே.பி.முனுசாமி கருத்து

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது ஆரேக்கியமானது அல்ல என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கடையை திறந்து வைத்த கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஒன்றிய அரசும் மாநில அரசும் இணக்கமாக செயல்படுவதன் மூலமாகவே இறையாண்மையை காக்க முடியும் என்று கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக தேசிய கட்சிகள் அல்லாமல் திராவிட கட்சிகளே ஆட்சியில் உள்ள நிலையில் தற்போது மத்தியில் உள்ள பாஜக ஒன்றிய அரசின் திட்டங்களை தாங்கள் தான் கொண்டு வந்ததாக கூறி தமிழ்நாட்டில் ஆய்வு செய்து வருவதாக கூறினார். இது ஆரோக்கியமான செயல் அல்ல என்றும் கூறிய அவர், இதனால் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாறுபட்ட சிந்தனைகள் வரும் போது அதிகாரிகளிடையே குழப்பங்கள் ஏற்படும் என்றும் அதனால் திட்டத்தில் குந்தகம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் இந்த நிலை இல்லை என்று கூறிய அவர் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தங்களது செயல்பாட்டை மக்களுக்கு சொல்வதற்காக இந்த துருப்பு சீட்டை பயன்படுத்தி வருவதாக கூறினார். …

The post தமிழகத்தில் ஒன்றிய அமைச்சர்களின் ஆய்வு ஆரோக்கியமானதல்ல: கே.பி.முனுசாமி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: