ஹீரோ மோட்டார்சின் ‘விடா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம், புதிதாக விடா என்ற பிராண்ட் பெயரில் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. விடா வி1 புரோ மற்றும் விடா வி1 பிளஸ் என்ற பெயர்களில் இவை சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. வி1 புரோ ஸ்கூட்டர் 3.94 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 165 கி.மீ தூரம் வரை செல்லலாம். வி1 பிளஸ் 3.44 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 143 கி.மீ தூரம் வரை செல்லலாம். மேற்கண்ட இரண்டு ஸ்கூட்டர்களையும் அதிவேக சார்ஜர் மூலம் 65 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இரண்டுமே அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை செல்லும். பூஜ்யத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை வி1 பிளஸ் 3.4 நொடிகளிலும், வி1 புரோ 3.2 நொடிகளிலும் எட்டும்.  7 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே உள்ளது. 3 வித டிரைவிங் மோட்கள், குரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்மார்ட் போனை இணைக்கும் வசதி, பின்புறம் ஒன்றை ஷாக் அப்சர்வர் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலையாக வி1பிளஸ் சுமார் ரூ.1.45 லட்சம் எனவும், வி1 புரோ ரூ.1.59 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டார் நிறுவனம் முதன் முதலாக களமிறக்கியுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஹீரோ மோட்டார்சின் ‘விடா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: