ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் பிடிபட்டார்

தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையம் நிலைய 4வது நடைமேடையில் ரயில்வே பாதுகாப்புப்படை உதவியாளர் சவுரவ் குமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் வந்த பயணிகளை கண்காணித்து, சந்தேகத்தின்பேரில் ஒரு வாலிபரை மடக்கிப்பிடித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது பையை சோதனை செய்தனர். அதில் 3 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது. அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் கேரள மாநிலம் ஆலப்புழா தோட்டப்பள்ளி சேர்ந்த அனுராஜ் (25) என்பது தெரியவந்தது. அனுராஜை, தேசிய போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வது குறிப்பிடத்தக்கது….

The post ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Related Stories: