குடும்பத்தின் வறுமை நிலை நீங்க எளிய முறையிலான விநாயகர் வழிபாடு..!!

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம்  பெருகும்.

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார்  ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. சொர்ண கணபதி மந்திரத்தை உச்சரித்து, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் ஏற்படும்.

பொன், வெள்ளி, செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகர் உருவங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதை விடவும் எளிதான முறையில் பசும் சாணத்தை பயன்படுத்தி பிள்ளையார் செய்து, சாதாரண அருகம்புல் சாற்றியும் வழிபடலாம். அருகம்புல்லை மட்டும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் சகல தோஷங்களும்  விலகி விடும். விநாயகரது அருளைப்பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகியவை உகந்த நாட்களாகும். செவ்வரளி, மஞ்சள் அரளி போன்ற மலர்களை சாற்றி  வணங்கினால் கூடுதல் சிறப்பு.

குடும்பத்தின் வறுமை நிலை நீங்க வெள்ளெருக்கு திரி போட்டு  நெய்தீபம் ஏற்றி விநாயகரை வழிபடலாம்.

Related Stories: