அறிந்த தலம் அறியாத தகவல்கள் :பேரூர் பட்டீஸ்வரர்

 ஐந்து அதிசயங்களை உள்ளடங்கிய ஐயாயிரமாண்டு (5000) ஆலயம் ஒன்று உள்ளது. அது கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில்  உள்ளது.

 ‘பேரூர்’ என்னும் பாடல் பெற்ற திருத்தலம். நால்வரால் பாடல் பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

  இங்கு ‘நடராஜப் பெருமான்’ ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவி வழிச் செய்தியும் உள்ளது.

 இந்த கோயிலில் ஐந்து அதிசயங்கள் உண்டு. அவை;

1) ‘இறவாத’ பனை

2) ‘பிறவாத புளி’

3) ‘புழுக்காத சாணம்’

4) ‘கல்லாகும் எலும்பு’

5) வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்பது.இது தான் அந்த அதிசயங்கள்.

இறவாத பனை பல ஆண்டு காலமாக இன்னும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று ெகாண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்பது என்றுமே எப்போதுமே கிடையாதாம்! இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் தீராத வியாதி எல்லாம் தீரும் என்கிறார்கள். இதுதான் ‘இறவாத பனை’.

பிறவாத புளி

அடுத்து ‘பிறவாத புளி’ என்று போற்றப்படும் ‘புளிய மரம்’ இங்கு இருக்கிறது. இந்த புளிய மரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம்! ‘புளியம் பழத்தின்’ கொட்டைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். ‘முளைக்கவே இல்லை’..! இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ளதாம். அதனால் ‘பிறவாத புளி’ என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்

மூன்றாவதாக புழுக்காத சாணம் கோயில் இருக்கிற ‘பேரூர்’ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் ‘சாணம்’ மண்ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்!

மனித எலும்புகள் கல்லாவது

இங்குள்ளவர்களின் யாரேனும் இறந்து விட்டால், அந்த உடலை எரித்த பிறகு, மிச்சமாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள நொய்யல் ஆற்றில் விடப்படுகிற ‘எலும்புகள்’ சிறிது காலத்தில் ‘கற்களாக உருமாறி’ கண்டெடுக்கப்படுகிறதாம்!

அதுதான் ‘பட்டீஸ்வரரின்’ திருவருள்.

தமது வலது ‘காதை’ மேல் நோக்கி வைத்தபடி மரணிப்பது

ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது ‘வலது காதை’ மேல் நோக்கி வைத்தபடி தான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் ‘பட்டீஸ்வரர்’. பட்டீஸ்வரரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப் பாம்பு படமெடுத்த நிலை உள்ளது. மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக் கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்பது போல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள். இவைகளோடு ‘பட்டீஸ்வரர்’ தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.

திப்புசுல்தான் பட்டீஸ்வரர் கோயில் அதிசயத்தை கண்டு ‘சிவலிங்கம்’ அடிக்கடி அசையும் என்று மற்றவர்கள் சொல்வது உண்மைதானா என அசைத்து பார்க்க திப்பு சுல்தான் மீது உடலில் அதிர்வுகள் தோன்றி நெருப்பின் மீது கைகள் வைப்பதை போன்ற உணர்வுடன் கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப் பின் சுய நினைவு அடைந்து தன் செயலுக்கு வருந்தி கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் மன்னிப்பு வேண்டினான்.பட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சி தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல் வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட வரலாற்றை ஆவணி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடுகின்றனர்.

Related Stories: