உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் படிக்க ஒன்றிய அரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் தர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த 2,000 மாணவர்கள் உள்பட சுமார் 20,000 இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சொந்த நாட்டு மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல், ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள முடிவுகள் ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. ஆகவே, உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் கல்வியை தொடர தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிற்கு போதுமான அழுத்தங்களை தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் படிக்க ஒன்றிய அரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் தர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: