மாணவர்களுக்கான விழிப்புணர்வு படம்

சென்னை: ‘பானு’ என்ற படத்தை தொடர்ந்து ஜி.வி.சீனு எழுதி இயக்கும் படம், ‘மெட்ராஸ் மஹால்’. பசவா புரொடக்‌ஷன் சார்பில் ஜி.ஸ்ரீவாணி, கே.வினோத் குமார் நம்பியார், எஸ்.முருகன், சார்வி ராஜூ தயாரிக்கின்றனர். கே.அப்துல் ரஹ்மான் ஒளிப்பதிவு செய்ய, டி.துளசிராமன் இசை அமைக்கிறார். இதில் சந்தோஷ், பிந்து மாதவன் உள்பட 4 பேர் ஹீரோக்களாக அறிமுகமாகின்றனர். ஹீரோயினாக அக்‌ஷரா கார்த்திக் அறிமுகமாகிறார். தற்போது மாணவர் சமுதாயம் பல்வேறு வழிகளில் சீரழிந்து வரும் நிலையில், அவர்களை எப்படி திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவது என்பது குறித்தும், அவர்களால் பெற்றோருக்கு எப்படி பெருமை சேர்ப்பது என்பது குறித்தும் சொல்லும் வகையில், இப்படம் வடசென்னை பின்னணியில் உருவாக்கப்படுகிறது.

Related Stories: