இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி மரணம்

சென்னை: இயக்குனரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டேன்லி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ஸ்டான்லி. தொடர்ந்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தை இயக்கினார். பிறகு ஸ்ரீகாந்தின் ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இயக்குநராக இருந்த அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்டான்லி. கடந்த 2007-ம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘ பெரியார் ‘ படத்தில் அறிஞர் அண்ணாவாக நடித்தார். தொடர்ந்து ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று காலமானார்.

Related Stories: