கோவை சுங்கம் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏன்? ஆய்வு நடத்திய ஐஐடி வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பு

கோவை: கோவையில் ராமநாதபுரம் சுங்கம் மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்துகளுக்கு வேகமாக வாகனங்கள் இயக்கப்பட்டதே காரணம் என்று ஐஐடி ஆய்வு குழு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் சுங்கம் மேம்பாலம் திறக்கப்பட்டு ஒரு மாதத்தில் 3 பேர் விபத்துகளில் பலியாகினர். வேகத்தடைகள், சாலை தடுப்புகள் அமைத்தும் விபத்துகள் தொடர்ந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் ஐஐடி நிர்வாகத்தை அணுகி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தியது. அதன்படி பேராசிரியர் கீதா கிருஷ்ணன் தலைமையிலான குழு பாலத்தை பார்வையிட்டு 2 முறை ஆய்வு செய்தது. முடிவில் விபத்துக்கு பாலத்தில் வாகனங்கள் வேகமாக இயக்கப்பட்டதே காரணம் என்றும், பாலத்தை இடித்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பாலத்தில் சுங்க மார்கமாக வளைவுக்கு முன்னர் 150மீட்டர் தூரத்தில் வேகம் காட்டி பொருத்தவும், பாலத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திற்குள் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அக்குழு அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.     …

The post கோவை சுங்கம் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏன்? ஆய்வு நடத்திய ஐஐடி வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: